உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 50 விநாயகர் சிலைகள் ஹிந்து முன்னணி திட்டம்

50 விநாயகர் சிலைகள் ஹிந்து முன்னணி திட்டம்

தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழா அன்று, பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டு, சதுர்த்தி விழா, 27ல், ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில், தொண்டாமுத்துார் வட்டாரத்தில், தொண்டாமுத்துார், பேரூர், ஆலாந்துறை ஆகிய ஒன்றியங்களில், 50 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, 29ல், ஊர்வலத்துடன், பூலுவபட்டியில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். நொய்யல் ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும், என, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை