உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டின்  நடுவே பள்ளம்; சரிசெய்ய கமிஷனர் உத்தரவு

ரோட்டின்  நடுவே பள்ளம்; சரிசெய்ய கமிஷனர் உத்தரவு

கோவை : சிரியன் சர்ச் எதிரே ரோட்டில் ஏற்பட்டுள்ள குழியை, உடனடியாக சரி செய்யுமாறு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.மாநகராட்சி மத்திய மண்டலம், 70வது வார்டு புரூக் பீல்ட்ஸ் ரோடு, சிரியன் சர்ச் எதிரே பாதாள சாக்கடை குழாய் செல்கிறது. ரோட்டின் நடுவே செல்லும் இக்குழாயில் உடைப்பு காரணமாக குழி ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எந்நேரமும் விபத்துக்குள்ளாகலாம் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியாகியது.இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் கல்பனா ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பாதிப்பை உடனடியாக சரி செய்யுமாறு, அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ