உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதிதிராவிடஇளைஞர்களுக்கு கடைக்கல் இயந்திர பயிற்சி

ஆதிதிராவிடஇளைஞர்களுக்கு கடைக்கல் இயந்திர பயிற்சி

கோவை : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, கடைக்கல் இயந்திரம் இயக்கும் பயிற்சி, என்.டி.டி.எப்., நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முடித்த, 18 முதல், 24 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆறு மாதம், 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சியை முழுமையாக முடிப்போருக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால், அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சி பெறுவோர் ஆரம்பத்தில், ரூ.15 ஆயிரம் - 20 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம். தனியார் தொழிற்சாலைகளில் வேலை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.இப்பயிற்சி பெற, www.tahdco.comஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணத்தை, 'தாட்கோ' செலுத்தும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி