உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உழவரை தேடி வேளாண்மை விழிப்புணர்வு கூட்டம்

 உழவரை தேடி வேளாண்மை விழிப்புணர்வு கூட்டம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி அலுவலக வளாகத்தில், விவசாயிகளுக்கு உழவரைத் தேடி வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வேளாண் வணிக உதவி அலுவலர் சுந்தர்ராஜன் பேசுகையில், உணவு பதப்படுத்துதல், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், வேளாண் உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மானியங்கள் குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் உலகநாதன் பேசுகையில், தென்னை மரத்தை காக்கும் வழிமுறைகள் மற்றும் தென்னைக்கு கொடுக்கப்படும் நுண்ணூட்டம் மற்றும் இதர மருந்துகள், மானிய திட்டங்கள் குறித்து பேசினார். கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் பேசுகையில், விற்பனை கூடம் வாயிலாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வாயிலாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் வழி முறைகள் குறித்து பேசினார். மேலும், உலர் களம், விளை பொருட்கள் இருப்பு வைக்கும் வசதிகள் குறித்து விளக்கினார். இதில், முன்னாள் ஊராட்சி தலைவர் ரத்தினசாமி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை