உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பலாத்கார வழக்கில் சிக்கியோர் கொலையில் ஈடுபட்டது அம்பலம்

 பலாத்கார வழக்கில் சிக்கியோர் கொலையில் ஈடுபட்டது அம்பலம்

கோவை: கோவை கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு, கொலை வழக்கில், தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த, நவ., 2 இரவு, கோவை விமான நிலையம் பின்புறம், கல்லுாரி மாணவி மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகள் சதீஷ், 30, கார்த்திக், 21, குணா, 20, ஆகிய மூவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கஸ்டடி விசாரணையில், குற்றவாளிகளுக்கு கொலையொன்றில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கூறியதாவது: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அன்று காலை, அன்னுார் கோவில்பாளையம் அருகே செரயாம்பாளையம் - பூராண்டாம் பாளையம் செல்லும் சாலையில் உள்ள, காட்டுப்பகுதியில் குற்றவாளிகள் மூவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, ஆடு மேய்க்கும் சூலுார் முத்து கவுண்டர்புதுாரை சேர்ந்த தேவராஜ், 55, என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு, அவரை மூவரும் கட்டையால் தாக்கியதில் தேவராஜ் உயிரிழந்தார். அதன் பின், கோவை வந்த குற்றவாளிகள், இரவில் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி பலாத்கார வழக்கில், கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில், பீளமேடு போலீசார் 'இ- பைலிங்' வாயிலாக நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை