- நமது நிருபர் -'பள்ளி, கல்லுாரிகளை சுற்றியுள்ள பகுதிகளில், போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப்பொருட்கள் விற்பனையை, முற்றிலும் தடுக்க வேண்டும்' என, கலெக்டரிடம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முறையிட்டனர்.அதன் விபரம்:பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, ஆனைக்கட்டி போன்ற பகுதிகளில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு, கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய் பதிக்க தோண்டிய குழிகளை மூடி, புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்.குனியமுத்துார், மணிகண்டன் நகர், போத்தனுார் கடை வீதி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு, பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்திருப்பது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.பள்ளி, கல்லுாரிகளை சுற்றியுள்ள பகுதிகளில், போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். குற்றங்கள் அதிகரிக்கின்றன. போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில், தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அவிநாசி, சுல்தான்பேட்டை, சூலுார் ஆகிய பகுதிகளை இணைத்து, இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.
'வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட்கட்டுமானத்தை தொடரணும்'
'வெள்ளலுார் குப்பை கிடங்கில் இருந்து, 15 கி.மீ., சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. ஈ தொல்லை, தொற்று நோய்களால் மக்கள் சிரமப்படுகின்றனர். வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டுமான பணியை தொடர வேண்டும்' என, கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.