உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி; 30 பதக்கங்கள் வென்ற வீரர்கள்

 ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி; 30 பதக்கங்கள் வென்ற வீரர்கள்

கோவை: கோயம்புத்துார் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம்(சி.டி.எம்.ஏ.,) சார்பில், 112 பேர், சென்னையில் ஐந்து நாட்கள் நடந்த, 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். தடை தாண்டுதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சி.டி.எம்.ஏ., வீரர், வீராங்கனைகள், 12 தங்கம், 12 வெள்ளி, ஆறு வெண்கலம் என, 30 பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்றவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, சி.டி.எம்.ஏ., தலைவர் ராதாமணி, செயலாளர் சுகுணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ