உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.45 லட்சத்தில் ஆடிட்டோரியம்

அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.45 லட்சத்தில் ஆடிட்டோரியம்

மேட்டுப்பாளையம்: ''காரமடை கன்னார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ரூ.45 லட்சம் மதிப்பில் ஆடிட்டோரியம் கட்டப்படும்,'' என, ஊராட்சித் தலைவர் தெரிவித்தார். காரமடை அடுத்த சிக்காரம்பாளையம் ஊராட்சி, கன்னார்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசுப்பையா தலைமை வகித்தார். ஆசிரியை அனிதா வரவேற்றார். சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: குப்பை இல்லா ஊராட்சியாக இருக்க வேண்டும் என்றால், மாணவர்களாகிய நீங்கள், பெற்றோரிடம், குப்பைகளை வீதிகளில் போடாமல், குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும் என கூற வேண்டும். நீங்களும், அதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.ஊராட்சியின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தில், 15 லட்சம் ரூபாய், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இப்பள்ளிக்கு, 45 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதில் ஆடிட்டோரியம் கட்டப்படும். ஸ்மார்ட் வகுப்பு அமைக்க, 3 லட்சம் ரூபாய் கட்டப்பட்டுள்ளது. விரைவில் ஸ்மார்ட் வகுப்பறையும் அமைக்கப்படும். இப்பள்ளியில், கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.பேச்சு, பாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழாசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை