உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

 குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோவை: குழந்தைகள் தினத்தை ஒட்டி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கியது. பேரணியை பயிற்சி கலெக்டர் பிரசாந்த் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பேரணி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ரேஸ்கோர்சில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள், 1098 உதவி எண் குறித்த பதாதைகளைஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை