உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருத்தி வரி விலக்கை திரும்பப் பெற பாரதீய கிசான் சங்கம் வலியுறுத்தல்

பருத்தி வரி விலக்கை திரும்பப் பெற பாரதீய கிசான் சங்கம் வலியுறுத்தல்

கோவை; பாரதீய கிசான் சங்க தேசிய துணைத் தலைவர் பெருமாள், மத்திய நிதியமைச்சர், வேளாண் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்: மத்திய அரசு, செப்., 31 வரை அளித்த பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை, டிச., 31 வரை நீட்டித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் தோல்வி, காய்ப்புழு, வெள்ளை ஈ, உள்நாட்டு பருத்தி விதைகள் கிடைக்காததால், பருத்தி சாகுபடி குறைந்து வருகிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு, 3.24 சதவீதம் பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து ஒரு கேண்டி (356 கிலோ) பருத்தி, ரூ.51 ஆயிரத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டால், நமது விவசாயிகளிடம் இருந்து ரூ.61 ஆயிரத்துக்கு யார் வாங்குவர்.. அரசின் அறிவிப்புக்கு பிறகு, சந்தையில் ஒரு கண்டி பருத்தி விலை ரூ.1,100 வரை குறைந்துள்ளது. இந்திய பருத்தி வரத்து அக்.,ல் துவங்கும். எனவே, பருத்தி இறக்குமதி மீதான வரி விலக்கை அரசு திரும்பப் பெற வேண்டும் இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை