உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கசக்கிறது கரும்பு விலை: கவலையில் தொழிலாளர்கள்

கசக்கிறது கரும்பு விலை: கவலையில் தொழிலாளர்கள்

வால்பாறை;பொங்கல்பண்டிகையையொட்டி, வால்பாறையில் விற்பனை செய்யப்படும் கரும்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் உள்ள பெரும்பாலான எஸ்டேட் கோவில்களில் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்கள் பொங்கல்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் அதிக அளவில் பொங்கல் பொருட்களை வாங்க வால்பாறையில் திரண்டனர். இதனிடையே ஒரு ஜோடி கரும்பு நேற்று, 100 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், தொழிலாளர்கள் கவலைடையந்துள்ளனர்.இது குறித்து கரும்பு வியாபாரிகளிடம் கேட்ட போது, 'இந்த ஆண்டு சமவெளிப்பகுதியில் இருந்து தான் கரும்பு வால்பாறைக்கு கொண்டுவரப்படுகிறது. டீசல் விலை உயர்வால் லாரி வாடகையும் அதிகமாக உள்ளது. மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, உடுமலை போன்ற ஊர்களிலிருந்து வால்பாறைக்கு கரும்பு லாரியில் கொண்டுவரப்பட்டு, ஜோடி கரும்பு,100 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை