உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மசோதாவை ரத்து செய்ய பா.ஜ., கூட்டத்தில் உறுதி

மசோதாவை ரத்து செய்ய பா.ஜ., கூட்டத்தில் உறுதி

வால்பாறை; சுற்றுச்சூழல்உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, பா.ஜ., மாவட்ட தலைவர் கூறினார்.வால்பாறை பா.ஜ., அலுவலகத்தில் நகர நிர்வாகிகள் கூட்டம் மண்டல் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, மண்டல் பார்வையாளர் தங்கவேல், பொதுசெயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றார்.கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசியதாவது:மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ.,வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை வீடு தோறும் சென்றடையும் வகையில் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.வால்பாறை மக்களை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாலை, 6:00 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் வழக்கம் போல் வந்து செல்ல, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கனகவல்லி, மண்டல பொதுச்செயலாளர் சுனில், பொருளாளர் கற்பகவிநாயகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை