உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டிலேயே கொண்டு வரலாம் கேண்டில் லைட் பீலிங்!

வீட்டிலேயே கொண்டு வரலாம் கேண்டில் லைட் பீலிங்!

கேண்டில் லைட் டின்னர் தேடி, ரெஸ்டாரன்ட்டுக்கு தான் போக வேண்டுமென்பதில்லை. வீட்டிலே பார்ட்டி பீல் கொண்டு வர, வித்தியாசமான கேண்டில்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன.இதை எந்தெந்த வெப்சைட்டில் தேடுவது? தரமாக இருக்குமா என நினைப்போர், அவிநாசி ரோட்டில் உள்ள, மீனாட்சி ஹாலில் நடக்கும் 'ஹஷ்டகலா' என்ற கைவினை பொருட்கள் கண்காட்சிக்கு நேரில் சென்று வாங்கி செல்லலாம்.இங்கே, ஹேண்ட் ஒர்க் பர்ஸ், பால்கனியில் வைக்கும் சைஸில் கட்டில், குட்டி மேசை, காட்டன் சுடிதார், குர்த்தீஸ், ஸ்டோன் செட் ஜூவல்ஸ், அலங்கார விளக்குகள், மர பொம்மைகள், கிச்சனில் பயன்படுத்தும் ஸ்மார்ட் கருவிகளுக்கு, பிரத்யேக அரங்குகள் உள்ளன.இதோடு, தேங்காய் சிரட்டை, மூங்கிலால் ஆன கேண்டில் கிடைக்கிறது. லேவண்டர், ரோஸ் நறுமணம் கொண்ட கேண்டில்களும் உள்ளன. இதை வீட்டில் ஏற்றி வைத்தால், 'பார்டி வைப்' இருப்பதோடு, அறை முழுக்க மணம் கமழும்.வரும் 4ம் தேதி வரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கும். அரங்கிற்கு செல்ல அனுமதி இலவசம் என்பதோடு, பார்க்கிங் வசதியும் இருப்பதால், குடும்பத்தோடு ஒரு விசிட் அடிக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை