மேலும் செய்திகள்
200 எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
22-Jul-2025
போத்தனூர்; சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும் என, மதுக்கரை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார். உதவி இயக்குனர் சுசிந்திரா அறிக்கை: சொட்டு நீர் பாசன முறையில் 60 முதல் 80 சதவீதம் வரை, நீர் பயன்பாட்டு திறன் அதிகரிக்கிறது. சேமிக்கப்பட்ட நீரை கொண்டு அதிகப்படியான நிலப்பரப்பில், பாசனம் செய்வதன் மூலம் பயரின் விளைச்சலும், 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது. பயிறுக்கு தேவையான உரங்கள் நீரில் கரைந்து, பாசன நீருடன் சேர்த்து பயிர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் உரத்தேவை 30 முதல் 45 சதவீதம் வரை குறைகிறது. உரம் இடுவதற்கான ஆள் கூலியும் குறைகிறது. உரமும், நீரும் தேவையான அளவில் வழங்கப்படுவதால் தரமான விளை பொருளை, அறுவடை செய்ய முடியும். இந்நிதியாண்டில் மதுக்கரை வட்டாரத்திற்கு, 270 ஹெக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, ரூ.2.8 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனம், மானியத்தில் அமைக்க விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கி புத்தக நகல், எப்.எம்.பி., வயல் வரைபடம் கொடுத்து, பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
22-Jul-2025