| ADDED : மார் 20, 2024 12:39 AM
கோவை;'பீக் ஹவர்' கட்டணம் ரத்து, 'டாரிப்' மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை, தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ் ஆகியோர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கடந்த, 2022ம் ஆண்டு ஜூன் மாதம், மின் வாரியத்தால் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது, குறு சிறு தொழில்களை பாதித்தது. இந்நிலையில், குறைந்த அழுத்த மின் மாற்றி இணைப்புகளுக்கு(எல்.டி.சி.டி.,) 'பீக் ஹவர்' கட்டணம், ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும், கூரை மேல் சோலார் பேனல் அமைத்து, மின் உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர்க்கு, 76 பைசா நெட்வொர்க் கட்டணத்தை குறைத்தும், 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்ற குழுந்தொழில் முனைவோர்க்கு, 3பி டாரிப்பில் இருந்து, 3ஏ1 டாரிப்புக்கு மின் இணைப்பு மாற்றி கொடுக்க, உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, குறு சிறு தொழில்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.