உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷாவில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம்

ஈஷாவில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம்

தொண்டாமுத்தூர்;கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன், நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.விழாவில், அழிந்து வரும் நாட்டு மாட்டு இனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈஷாவில் வளர்க்கப்படும் 23 வகையான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடந்தது. இதில், மாடுகள் ஒவ்வொன்றாக மேடைக்கு அழைத்து வரப்பட்டு, அம்மாட்டின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பழங்குடி மக்கள், விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து, 50க்கும் மேற்பட்ட பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். இதில், வெளிநாட்டவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் நமது கலாசாரங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து, மாலையில், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பறையாட்டம், மல்லர் கம்பம் மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை