உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலையில் திட்ட பணிகளை காணொலியில் முதல்வர் துவக்கம்

மருதமலையில் திட்ட பணிகளை காணொலியில் முதல்வர் துவக்கம்

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 5.70 கோடி ரூபாய் மதிப்பிலான வசந்த மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 36 கோவில்களில், 592.38 கோடி ரூபாய் மதிப்பிலான, 43 திட்டப்பணிகளுக்கு, காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, 5.70 கோடி ரூபாய் மதிப்பிலான வசந்த மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவில், கலெக்டர் கிராந்திகுமார் அடிக்கல் நாட்டினார். மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் ஹர்சினி, அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை