உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிட்டி கிரைம் செய்திகள்

 சிட்டி கிரைம் செய்திகள்

மாமனார் மீது தாக்குதல் வடவள்ளி: வடவள்ளி ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன், 49. இவரது மூன்றாவது மகள், சாய்பாபா காலனியை சேர்ந்த சக்திவேல், 25 என்பவரை திருமணம் செய்தார். இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஆறு மாதங்களாக பெற்றோர் வீட்டில் உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேசன் வீட்டுக்கு சக்திவேல், அவரது நண்பர்கள் இருவர் வந்து, குழந்தைகளை பார்க்க வேண்டும் எனத் தகராறு செய்தனர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சக்திவேல், வெங்கடேசனை தாக்கியதுடன் கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்ததால், சக்திவேல் உள்ளிட்டோர் தப்பினர். காயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பெண் மயங்கி விழுந்து பலி கோவை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் செந்தமிழ் கவிதா, 43. இவரது நண்பர் தஞ்சாவூர் திருவிடைமருதுாரை சேர்ந்தவர் இசபெல்லா, 42. கோவை வந்த இருவரும் மொபட்டில், அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகே பின்னால் அமர்ந்திருந்த செந்தமிழ் கவிதா, மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். லாரி மோதி மூதாட்டி பலி இருகூர்: இருகூரை சேர்ந்தவர் ராமாத்தாள், 75. நேற்று முன்தினம் கோவை கொச்சி - சேலம் பைபாஸில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று, அவர் மீது மோதியது. லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியதில் பலியானார். லாரி டிரைவர் சேலம் எடப்பாடியை சேர்ந்த வெங்கடேஷ், 38 என்பவர் மீது வழக்கு பதிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் வாலிபர் பலி மதுக்கரை: பாலக்காடு நெம்மாராவை சேர்ந்தவர் ராகுல், 25. நேற்று முன்தினம் தனது நண்பர் அனில் ஜித் உடன் கொச்சினில் இருந்து பைக்கில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கல்குவாரி அருகே எதிரில் அதிவேகமாக வந்த கல்லுாரி பஸ் ஒன்று, பைக் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் ராகுலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அனில் ஜித் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுக்கரை போலீசார் பஸ் டிரைவர் பாலமுரளி கிருஷ்ணன் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வாகன சோதனையில் 30 லட்சம் பறிமுதல் போத்தனூர்: -மதுக்கரையை அடுத்த எட்டிமடை சோதனை சாவடியில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஸ்கூட்டரில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். க.க.சாவடி, காந்தி நகரை சேர்ந்த சுரேஷ்குமார், 34 என தெரிந்தது. வாகனத்தின் சீட்டின் கீழ், கட்டு, கட்டாக ரூ.30 லட்சம் ரொக்கம் இருந்தது. ரொக்கத்துடன் சுரேஷ்குமார் க.க. சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில், சுரேஷ்குமார் கட்டுமான பணிக்கான பொருட்கள் வாங்க மற்றும் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கவும் பணம் கொண்டு செல்வது தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை