தந்தை, மகன் மீது தாக்குதல்
கோவை உக்கடம் பிலால் நகரை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது, 40. இவரது மகனை உக்கடத்தை சேர்ந்த முகமது உமர், அனாஸ், அப்துல் சலாம் ஆகியோர் தாக்கினர். இதுகுறித்து கேட்பதற்காக ஷாகுல் ஹமீது, கோவை அல் அமீன் காலனிக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவரையும் மூவரும் தாக்கினர். இதுகுறித்து ஷாகுல் ஹமீது, பெரிய கடைவீதி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர். சரக்கு வாகனத்தின் கண்ணாடி உடைப்பு
கோவை புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ், 52. இவரது இளைய மகன், கார்த்திக். இவரது நண்பர்கள், சாபர், அசார். கடந்த, 15ம் தேதி கார்த்திக், சாபர், அசார் ஆகிய மூவரும் மதுபோதையில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். தொடர்ந்து, கண்ணாடியை மாற்றித்தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தது போல் கண்ணாடியை மாற்றித்தரவில்லை. இதுகுறித்து சுரேஷ், கேள்வி எழுப்பினார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கார்த்திக் உட்பட மூவரும் சுரேஷை தாக்கினர். சுரேஷ் அளித்த புகாரின் பேரில், கடைவீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.