| ADDED : ஜன 08, 2024 08:57 PM
பொள்ளாச்சி;'ராணிப்பேட்டை நவ்லாக் அரசு பண்ணையில், தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன,' என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவ்லாக் அரசு தென்னை பண்ணை மற்றும் தென்னை ஒட்டு மையம், வேளாண் துறை கட்டுப்பாட்டில் இருந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.நவ்லாக் தென்னை ஒட்டு மையத்தில், மேற்கு கடற்கரை நெட்டை, சவுகாட் ஆரஞ்சு குட்டை, தாய் மரங்கள் பராமரிக்கப்பட்டு ஒட்டு சேகரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.நெட்டை X குட்டை ஒட்டு ரகங்கள் விரைவில் பூ பூக்கும் தன்மை, வீரிய வளர்ச்சி, அதிக மகசூல், அதிக எடை, தரமான கொப்பரைகள், அதிக எண்ணெய் கொடுக்க கூடியது.சவுகாட் ஆரஞ்சு குட்டை ரகம், இளநீர் பயன்பாட்டுக்கு உகந்தது. பண்ணையில் நெட்டை X குட்டை ஒட்டு தென்னங்கன்றுகள் (விலை, 125 ரூபாய்), 41 ஆயிரம் எண்ணிக்கையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. சவுகாட் ஆரஞ்சு குட்டை தென்னங்கன்றுகள் (விலை, 60ரூபாய்), நான்காயிரம் எண்ணிக்கையில் விற்பனைக்கு தயராக உள்ளன. பண்ணையில், 1974ம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. தென்னங்கன்றுகள் வாங்க விரும்புவோர், 90805 78942, 90923 71212 மற்றும் 98945 43158 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை ராணிப்பேட்டை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.