உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கடைகளை திறக்காமல் இழுபறி

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கடைகளை திறக்காமல் இழுபறி

பேரூர் : பேரூர் கோவில் அருகில் சிறு வியாபாரிகளுக்காக 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறு கடைகள், பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டிக்கிடக்கின்றன.பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு, நவம்பர் 12ல் நடந்தது. அதையொட்டி, நன்கொடையாளர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் மூன்று கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் எதிரே பக்தர்களுக்கு இடையூறா இருந்த சிறுவியாபாரிகளின் கடைகள் அப்புறப்படுத்தி, மாற்று இடம் வழங்கும் வகையில் தெப்பக்குளம் அருகே 17 சிறு கடைகள் கட்டப்பட்டன. பொது ஏல முறையில் வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டது.

கும்பாபிஷேகம் முடிந்து ஏழு மாதமாகியும் கடைகள் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது. இதனால், கோவில் எதிரே வியாபாரிகள் பழையபடி கொடிமரம், பட்டிசுத்தும் மேடை உள்பட கோவிலின் இருபக்கமும் வியாபாரத்தை தொடர்கின்றனர். இதனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பூட்டிக் கிடக்கும் 17 சிறு கடைகளை பயன்பாட்டுக்கு விட கோவில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவில் அறங்காவலர் ஒருவர் கூறுகையில், 'வியாபாரிகளின் நன்மைக்காகவும், கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் வகையிலும் கடைகள் கட்டப்பட்டன. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரிகளின் குளறுபடியால் இழுபறி நீடிக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி