உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக  கோவை கல்வியாளர் தேர்வு 

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக  கோவை கல்வியாளர் தேர்வு 

கோவை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) உறுப்பினராக, கோவையை சேர்ந்த கல்வியாளர் பிரேம்குமார் மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையை சேர்ந்த கல்வியாளர் பிரேம்குமார், ஸ்ரீ நாராயண குரு மேலாண்மை கல்லுாரி மற்றும் எஸ்.என்.டி., குளோபல் கல்வி குழுமத்தில், முதல்வராக பணியாற்றியுள்ளார். கல்லுாரி பேராசிரியராக, 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.பாரதியார் பல்கலையில், நிதி கட்டுப்பாட்டு ஆய்வு துறையில் முதல் நபராக, முனைவர் பட்டம் பெற்றவர் இவர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் உறுப்பினர் பொறுப்பில், ஆறு ஆண்டுகளுக்கு, இந்த பொறுப்பில் தொடர உள்ளார். கல்வி மற்றும் நிதிசார்ந்த செயல்பாடுகளை மையமாக கொண்டு, உறுப்பினர் பதவிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி