உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏலத்திற்கு தயார் நிலையில் அரிசி கடத்தல் வாகனங்கள்

ஏலத்திற்கு தயார் நிலையில் அரிசி கடத்தல் வாகனங்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் ரேஷன் அரிசி கடத்தி பிடிபட்ட 140 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக பட்டியலிடப்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் குப்பைபோன்று குவித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வாகனங்கள் அனைத்தையும் ஏலம் விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து பறிமுதல் வாகனங்கள் அனைத்தையும் அதிகாரிகள் வரிசையில் அடுக்கி வைத்துள்ளனர். ஒரு கார், ஒரு ஆம்னி, ஒரு லாரி உள்பட 140 வாகனங்கள் உள்ளன. வாகனங்களின் இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர்களை பதிவு செய்து, அவற்றுக்கு மதிப்பீடு செய்யப்படும். அதன்பின், மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு ஏலம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர்களும், ஆட்டோ மொபைல் இன்ஜினியரும் நேற்று ஆய்வு செய்து மதிப்பீடு தயாரித்தனர். ஒவ்வொரு வாகனத்திற்கும் வரிசை எண் குறிப்பிட்டு, அதை வாகனத்திலும் எழுதினர். மொத்தம் 140 வாகனத்திற்கும் மதிப்பீடு தயாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி