மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
கோவை:மாநகராட்சிக்கு இரண்டாம் அரையாண்டு வரையிலான வரியினங்கள் செலுத்த ஏதுவாக, சிறப்பு முகாம் நடந்தது; இன்றும் நடக்கிறது. அதன்படி, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 34வது வார்டு மஞ்சீஸ்வரி காலனி, 35வது வார்டு கற்பக விநாயகர் கோவில், தேவாங்க நகர், 75வது வார்டில் மாரியம்மன் கோவில் தெரு, சீரநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில், இன்று முகாம் இடம்பெறுகிறது.நாளை, 33வது வார்டு மூவர் நகர் நுாலக கட்டடம், 36வது வார்டில் ரேஷன் கடை, புது தில்லை நகர், 5வது வீதியிலும், 74வது வார்டில் சத்துணவுக் கூடம், பாரதியார் வீதி, பூசாரிபாளையத்திலும் நடக்கிறது. கிழக்கு மண்டலம், 7, 8வது வார்டுகளுக்கு நேரு நகர் கிழக்கு பகுதியிலும், 24வது வார்டு குருசாமி நகரிலும், 56வது வார்டு ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானத்திலும் முகாம் நடக்கிறது.வார்டு, 57 நெசவாளர் காலனியிலும், தெற்கு மண்டலத்தில், 89வது வார்டு சுண்டக்காமுத்துார் மாநகராட்சி வார்டு அலுவலகம், 99வது வார்டு செட்டிபாளையம் மாநகராட்சி பூங்கா, வடக்கு மண்டலம், 15வது வார்டு அங்கன்வாடி மையம், சுப்ரமணியம்பாளையத்திலும் நடக்கிறது.25வது வார்டு காந்திமாநகர் அரசு பள்ளி, மத்திய மண்டலத்தில், 32வது வார்டு சிறுவர் பூங்கா, நாரயணசாமி வீதியிலும், 62வது வார்டு பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் இடம்பெறுகிறது.வார்டு, 84ல் ஜி.எம்.நகர் தர்கத் இஸ்லாம் ஆரம்பப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. மார்ச், 31ம் தேதி வரை சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம்போல் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை செயல்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago