உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சைபர் குற்றங்கள் புதிய சட்டத்தில் சேர்ப்பு

 சைபர் குற்றங்கள் புதிய சட்டத்தில் சேர்ப்பு

கொ லை, தற்கொலைக்கு தூண்டுதல், தாக்குதல் மற்றும் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் தொடர்பான ஐ.பி.சி.,யின் விதிகள் பி.என்.எஸ் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, பின்தொடர்தல் மற்றும் ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதித்தல் தொடர்பான ஐ.பி.சி.,யின் விதிகளை பி.என்.எஸ் தக்க வைத்து கொண்டுள்ளது. கூட்டுப் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவரை வயது வந்தவராக வகைப்படுத்துவதற்கான வரம்பை, 16 வயதிலிருந்து, 18 வயதாக அதிகரிக்கிறது. திருட்டு, கொள்ளை மற்றும் ஏமாற்றுதல் தொடர்பான ஐ.பி.சி., யின் விதிகளை பி.என்.எஸ்., தக்க வைத்துள்ளது. சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி