உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு

கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி அருகே, தனியார் நிறுவனம் கழிவுகளை எரிப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார்.ஊஞ்சவேலாம்பட்டி பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, அனுப்பர்பாளையத்தில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. நிலத்தின் அருகே உள்ள கோவில் நிலத்தை உள்வாடகைக்கு எடுத்து, தனி நபர் நிறுவனம் நடத்தி வருகிறார்.அதில், அமிலக்கழிவுகளை எடுத்து வந்து அதை மண்ணில் கலந்து விற்பதும், பழைய டயர்களை எரித்து அதில் உள்ள கம்பிகளை பிரித்து எடுத்து விற்பனை செய்கிறார்.இதனால், நிலத்தடி நீரும், காற்றும் மாசடைகிறது. அமிலங்களை பூமியில் கொட்டி மண்ணோடு கலப்பதால் கிணறு மற்றும் போர்வெல்களில் உள்ள தண்ணீரின் தன்மை மாறியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை.அதிகாரிகள் ஆய்வு செய்து, அவர் மீது நடவடிக்கை எடுத்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை