உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஆனைமலை:ஆனைமலை அருகே, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சோமந்துறைசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நலக்கல்வி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியானது, பள்ளியில் புறப்பட்டு, கடைவீதி வழியாக அருட்செல்வர் மகாலிங்கம் மணிமண்டபம் வரை சென்று, பள்ளியில் நிறைவடைந்தது.விழாவில், தலைமை ஆசிரியர் சிவக்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகர், வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லதுரை முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், உடற்பயிற்சி ஆசிரியர் ஜெயவேல், ஆசிரியர்கள் ஷோபனா, கிரிஜா, சுகாதார ஆய்வாளர்கள் சாந்தகுமார், தீபக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை