மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
குறிச்சி : பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வெள்ளலூர் அருகேயுள்ள வெள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி(23). அதே பகுதியைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி(28). கடந்த ஏழு ஆண்டுகளாக வளர்மதியும், கருணாமூர்த்தியும் காதலித்து வந்தனர். நெருங்கிப் பழகியதால், கர்ப்பமான வளர்மதியை, கடந்த 2009ம் ஆண்டு, மருத்துவமனையில் கலைக்கச் செய்தார். இந்நிலையில் கடந்த சில மாதமாக, வளர்மதியை கருணாமூர்த்தி தவிர்த்தார். கடந்த 22ம் தேதி, கருணாமூர்த்தியின் வீட்டுக்குச் சென்ற வளர்மதி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். மறுத்த கருணாமூர்த்தி, 'தான் காதலிக்கவில்லை எனவும், கர்ப்பத்துக்கு தான் காரணமில்லை,' எனவும் கூறினார். வளர்மதி, நேற்று மதியம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். அதில், 'தன்னை காதலித்து, கர்ப்பமாக்கி, தற்போது திருமணத்துக்கு மறுக்கும் கருணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என, குறிப்பிட்டிருந்தார். எஸ்.ஐ., அமுதா வழக்கு பதிவு செய்து, கருணாமூர்த்தியை கைது செய்தார். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago