உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் அதிக இடங்களில் கம்யூ., வெற்றி

தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் அதிக இடங்களில் கம்யூ., வெற்றி

வால்பாறை : சோலையார் குரூப் டீ எஸ்டேட்டில் நடந்த தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் இ.கம்யூ., கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வால்பாறை அடுத்துள்ளது சோலையார் குரூப் டீ எஸ்டேட். இங்குள்ள கல்லார், ஈட்டியார், சோலையார் உள்ளிட்ட 5 எஸ்டேட்டுகளில் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., இ.கம்யூ., காங்., ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இ.கம்யூ.,கட்சி சார்பில் போட்டியிட்ட சோலையார் 2ம் பிரிவில் கண்ணன்,சோலையார் 3ம் பிரிவு எஸ்டேட்டில் சந்திரன்,சோலையார் பேக்டரியில் ராஜா, நான் ஸ்டாப் பிரிவில் மணி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.சோலையார் முதல் பிரிவில் ஐ.என்.டி.யு.சி., சார்பில் போட்டியிட்ட சண்முகவேலு வெற்றி பெற்றார். ஈட்டியார் எஸ்டேட்டில் நல்லதம்பியும், கல்லார் பேக்டரியில் அண்ணாத்துரையும், கல்லார் எஸ்டேட்டில் ஜெயசீலனும் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.சோலையார் குரூப் டீ எஸ்டேட்டில் இ.கம்யூ., கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை