உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீல்கள் வாலிபால் நாளை துவக்கம்

வக்கீல்கள் வாலிபால் நாளை துவக்கம்

கோவை : கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில், மாநில அள விலான மூன்றாம் ஆண்டு வாலிபால் போட்டி நாளை துவங்குகிறது. வக்கீல்கள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டி, கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நாளை (ஆக.13) துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில் 25 அணியினர் பங்கேற்கின்றனர். கோவை வக்கீல்கள் சங்க தலைவர் நந்தகுமார் போட் டியை துவக்கி வைக்கிறார். வெற்றி பெறும் அணிக்கு 'சிபிஏ' கோப்பையுடன், 15 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படுகிறது. சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கும் பரிசளிப்பு விழாவில், மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம், பரிசு வழங்கி பாராட்டுகிறார். ஏற்பாடுகளை, கோவை வக்கீல்கள் வாலிபால் கிளப் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை