உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பனியன் விற்பனை மந்தம்

பனியன் விற்பனை மந்தம்

வால்பாறை : வால்பாறையில் பருவ மழை சூடுபிடித்துள்ள நிலையிலும், பனியன் விற்பனை சூடு பிடிக்காததால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வால்பாறையில், பருவ மழை பொழிந்து வருவதால், பரம்பிக்குளம் பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை நிரம்பியதால், சேடல் அணை வழியாக, பரம்பிக்குளத்துக்கு திறந்து விடப்பட்டது. இதே போல், அப்பர்ஆழியாறு, காடம்பாறை அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு, தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.அதிகாலையில் கடும் பனிப்பொழி, மாலையில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடுங்குளிர் நிலவிய போதும், பனியன் விற்பனை சூடு பிடிக்காததால், நேபாள வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். 'ஆண்டுதோறும் பருவ மழை துவங்கும் போது, வால்பாறைக்கு வந்து விடுவோம். கடந்தாண்டை விட தற்போது கடுங்குளிர் நிலவிய போதும், பனியன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை; இது, எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை