உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்குமூட்டையில் பெண் பிணம் போலீசார் விசாரணை

சாக்குமூட்டையில் பெண் பிணம் போலீசார் விசாரணை

வால்பாறை : வால்பாறை, சின்கோனா ரயான்டிவிஷன் ஏழாவது பிரிவு எஸ்டேட். இங்கு தொழிலாளியாக வேலை செய்து வருபவர் அம்மினி(62). வீட்டில் தனியாக வசித்துவரும் இவர் சமீபத்தில் தான் எஸ்டேட்டில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.இவர் கடந்த சில தினங்களாக வீட்டில் இல்லாததால், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் சாக்குமூட்டையில் பிணம் இருப்பது கண்டறியப்பட்டு, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி (பொறுப்பு) தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி