உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "டிவி பார்க்க எதிர்ப்பு மாணவி தற்கொலை

"டிவி பார்க்க எதிர்ப்பு மாணவி தற்கொலை

பொங்கலூர் : 'டிவி' பார்க்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பொங்கலூர் ரங்கபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழந்தார். பொங்கலூர் ரங்கபாளையத்தை சேர்ந்தவர் ராஜன்; பனியன் கம்பெனி தொழிலாளி. மகள் லில்லி புஷ்பம் (15); படியூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். அதிக நேரம் 'டிவி' பார்த்தால், படிப்பு பாதிக்கும் என்று கூறி, 'டிவி' பார்க்க, பெற்றோர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். மனமுடைந்த அம்மாணவி நேற்று முன்தினம் பாத்ரூமுக்குள் சென்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவளை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.00 மணிக்கு இறந்தாள். அவினாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை