உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சியில் 2,864 மனு தாக்கல்

பொள்ளாச்சியில் 2,864 மனு தாக்கல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியங்களில், உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 2,864 மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 பேரும், 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 95 பேரும், 39 ஊராட்சி தலைவர் பதவிக்கு 217 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 968 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 1,290 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தெற்கு ஒன்றியத்தில், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 பேரும், 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 70 பேரும், 26 ஊராட்சி தலைவர் பதவிக்கு 121 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 669 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். மொத்தம் 871 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு மாவட்ட உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், 13 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 71 பேரும், 19 ஊராட்சி தலைவர் பதவிக்கு 95 பேரும், 162 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 533 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.மொத்தம் 703 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 34 ஊராட்சிகளில் இருந்து தலைவர் பதவிக்கு நேற்று 88 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை