உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி: திறமையை வெளிப்படுத்தி மாணவர்கள் அசத்தல்

 தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி: திறமையை வெளிப்படுத்தி மாணவர்கள் அசத்தல்

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசு வெல்' வினாடி-வினா போட்டியில், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'பட்டம்' இதழ் வெளியி டப்படுகிறது. மேலும், 'தினமலர்' நாளிதழ் சார்பில் வினாடி- வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சக்தி ரோடு கணேசபுரத்தில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தகுதி சுற்றில், 115 பேர் பங்கேற்றனர். தேர்வு பெற்ற 16 பேர் எட்டு அணிகளாக, இரண்டாவது சுற்றில் பங்கேற்றனர். 'ஜி' அணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியர் சஞ்சனா, ஸ்ரீ தர்ஷினி ஆகியோர் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு பள்ளி முதல்வர் ஷீலா, தாளாளர் ஆன்சிட்டா ஆகியோர் பரிசு வழங்கினர். ஆசிரியர்கள் தேன்மொழி, அண்ணாமலை ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். * ரேஸ்கோர்ஸ் வி.சி.வி., சிஷு வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தகுதி சுற்றில், 315 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர், எட்டு அணிகளாக பங்கேற்றனர். 'எச்' அணியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் சாய்சரண், 8ம் வகுப்பு மாணவன் கவுதம் ஆகியோர் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி முதல்வர் கலைவாணி பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் சரவணகுமார், மணிமேகலா, சசிகலா ஆகியோர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். கிப்ட் ஸ்பான்சர்கள் 'பதில் சொல் - பரிசு வெல்' வினாடி-வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை