உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரே நாளில் கருத்து கேட்கிறது தி.மு.க., - அ.தி.மு.க.,

தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரே நாளில் கருத்து கேட்கிறது தி.மு.க., - அ.தி.மு.க.,

கோவை;தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., குழுவினர், கோவையில் இன்று (சனிக்கிழமை) பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில், அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, தி.மு. க., சார்பில், எம்.பி., கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவினர், ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கட்சியினர் மற்றும் பொதுமக்கள், தொழில்துறையினரை சந்தித்து, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து, கோரிக்கை மனு பெறுகின்றனர்.இக்குழுவினர், கோவை பீளமேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை, 10:00 மணி முதல், அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு, அறிக்கையை இறுதி செய்து, கட்சி தலைவரான, முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க இருக்கின்றனர்.

அ.தி.மு.க., குழு

இதேபோல், அ.தி.மு.க., சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மண்டலம் வாரியாக சென்று கருத்து கேட்கின்றனர்.இக்குழுவினரும் இன்று (சனிக்கிழமை) சின்னியம்பாளையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி