| ADDED : நவ 26, 2025 07:20 AM
சூலூர்: கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செம்மொழி பூங்கா திறப்பு விழா முடிந்து, நீலம்பூர் லீ மெரிடியன் ஓட்டலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவருக்கு, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சூலூர் தொகுதி பதுவம்பள்ளி ஊராட்சி மற்றும் அன்னூர் ஒன்றியம் பிள்ளையப்பம் பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி பகுதிகளில் கடந்த, 50 ஆண்டுகளாக இரு முனை மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. விவசாயிகள், தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு, மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.