உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிந்தனைகளை சிதற விடாதீங்க! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை

சிந்தனைகளை சிதற விடாதீங்க! கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை

வால்பாறை:''படிக்கும் வயதில், தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதில் இடம் தரக்கூடாது,'' என்று பட்டமளிப்பு விழாவில் கல்லுாரி இணை இயக்குனர் கீதா தெரிவித்தார்.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். விழாவில், 260 மாணவ, மாணவியருக்கு, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கீதா பட்டங்களை வழங்கி பேசியதாவது: கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் குடும்ப சூழ்நிலைகளை உணர்ந்து நன்கு படிக்க வேண்டும். படிக்கும் வயதில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகக்கூடாது.படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற சிந்தனைகளுக்கு மனதில் இடம் தரக்கூடாது. கல்வியால் மட்டுமே, வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து, படிக்க வேண்டும்.உழைப்பால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். உங்களது பெற்றோர் படும் கஷ்டத்தை உணர்ந்து, மாணவர்கள் திறம்பட படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணை இயக்குனர் கலைசெல்வி, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ