மேலும் செய்திகள்
உண்ணி சொட்டு மருந்து வழங்க கால்நடைத்துறை செயல்விளக்கம்
4 hour(s) ago
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
4 hour(s) ago
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
4 hour(s) ago
இன்று இனிதாக பொள்ளாச்சி
4 hour(s) ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இன்று நடக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்நிலையில், பொள்ளாச்சி நகரப்பகுதியில் இருந்து, கோவை வரை ரோட்டின் இருபுறமும் கட்சி கொடி கட்டி, கட்சியினர் 'அட்ராசிட்டி' செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் கட்சி கொடிகள் சரிந்து கிடந்ததால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகினர்.போலீஸ் எஸ்.பி., பத்ரி நாராயணன் அறிக்கை:பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் கனரக வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட், ஜமீன் முத்துார், டி.நல்லிக்கவுண்டன் பாளையம், சி.கோபாலபுரம், வடக்கிபாளையம், சூலக்கல் வழியாக கோவை ரோட்டை அடைய வேண்டும்.கோவையில் இருந்து, பொள்ளாச்சி நோக்கி வரும் கனரக வாகனங்கள், கோவில்பாளையத்தில் இருந்து இடது பக்கம் திரும்பி, நெகமம் வழியாக சென்று, கரப்பாடி பிரிவு, அனுப்பர்பாளையம், திப்பம்பட்டி வழியாக உடுமலை ரோட்டை அடைய வேண்டும். பொள்ளாச்சி செல்வோர், புளியம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.பொள்ளாச்சியில் இருந்து, கோவை செல்லும் இலகுரக வாகனங்கள், வடக்கிபாளையம் பிரிவில் இருந்து, வடக்கிபாளையம், சூலக்கல் வழியாக கோவை ரோட்டை அடையலாம். கோவையில் இருந்து பொள்ளாச்சி வரும் இலகுரக வாகனங்கள், குள்ளக்காபாளையம் பி.வி.என்., பள்ளி சத்திப்பில் இடது பக்கம் திரும்பி, தொப்பம்பட்டி, நெகமம் ரோடு வழியாக பொள்ளாச்சியை அடையலாம். இந்த போக்குவரத்து மாற்றம், காலை, 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை அமலில் இருக்கும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago