உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விவசாயிகள் குறை தீர் கூட்டம் இன்று ரத்து

 விவசாயிகள் குறை தீர் கூட்டம் இன்று ரத்து

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பவன்குமார் அறிக்கை: வேளாண் -உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ''87வது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர் மாநாடு“ சென்னையில் இன்று நடக்கிறது. இதில் அனைத்து வேளாண் துறை மற்றும் சகோதரத்துறை தலைமை அலுவலர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். அதனால் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேளாண் உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் தேதி விவசாயிகளுக்கும், விவசாய சங்கங்கங்களுக்கும் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்