உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென் இந்திய அளவிலான கால்பந்து: புலியகுளத்தில் கோலாகலம்

தென் இந்திய அளவிலான கால்பந்து: புலியகுளத்தில் கோலாகலம்

கோவை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென் இந்திய அளவிலான கால்பந்து போட்டி புலியகுளத்தில் நடக்கிறது. புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிகள் ஜன., 12ம் தேதி துவங்கி இன்று வரை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் (பிளட் லைட்) மின்னொாளியில் நடக்கிறது. இதில், 14, 17 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 14 வயது பிரிவில், 12 அணிகள், 17 வயது பிரிவில், 26 அணிகள் மற்றும் ஓபன் பிரிவில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் 14 வயது பிரிவில், பிரைடு எப்.சி., பி.வி.எப்.சி., பிளையர் பீட்ஸ் எப்.சி., மற்றும் ஏ.வி.எம்.எஸ்., ஆகிய அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 17 வயது பிரிவில், கொளச்சல் எப்.சி., அண்டர்ரேட்டட் எப்.சி., ஜேப்பியார் பள்ளி எப்.சி., ஏ.வி.எப்.சி., ஸ்வீட் ராஸ்கல்ஸ் எப்.சி., மரடோனா எப்.சி., ரோன் ஸ்போர்ட்ஸ், மெஜஸ்டிக் கால்பந்து அகாடமி அணிகள், காலிறுதிக்கு தகுதி பெற்றன.நேற்று ஆண்கள் ஓபன் பிரிவு போட்டிகள் துவங்கின. போட்டிகளை, புலியகுளம் அந்தோணியார் சர்ச் பங்குத்தந்தை ராயப்பன் துவக்கி வைத்தார்.இதன் முதல் போட்டியில், சிந்து செலக்ட் எப்.சி., அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் பர்ஸ்ட் கிக் ஸ்கூல் ஆப் சாக்கர் அணியையும், ரத்தினம் கல்லுாரி அணி 8 - 0 என்ற கோல் கணக்கில் டிரீம் எப்.சி., அணியையும், அக்வா சப் அணி 3 - 2 (பெனால்டி) என்ற கோல் கணக்கில், ஒய்.எப்.எஸ்.சி., அணியையும் வீழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை