உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொய் சொல்லி ஏமாற்றும் கோபாலபுரம் குடும்பம்!

பொய் சொல்லி ஏமாற்றும் கோபாலபுரம் குடும்பம்!

சென்னை: 'குடும்பத்தின் அதிகார பசிக்கு, இன்னும் எத்தனை ஆண்டு காலம் பொய் சொல்லி, மக்களை ஏமாற்றும் கோபாலபுரம் குடும்பம்?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தமிழகத்தில் தடை விதித்ததே தி.மு.க., தான் என்பதை மக்கள் மறந்திருப்பர் என்று நினைத்து, மதுரையில் ஏறுதழுவுதல் அரங்கை திறந்து வைத்திருக்கும் முதல்வர், புதிய ஏமாற்று கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான், 2011 ஜூலை 11ல் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.பசையான மத்திய அமைச்சர் பதவிகளை பெற்று, ஊழலை மட்டுமே முழு நேர வேலையாக செய்த தி.மு.க.,வுக்கு, அப்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க நேரமில்லை.ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த, 2016 ஜனவரியில் பிரதமர் மோடி அரசு அனுமதி அளித்து, அரசிதழில் வெளியிட்ட அறிவிப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.உடனே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசிடம் ஜல்லிக்கட்டு நடத்த, ஒரு அரசாணையை இயற்றுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, 2017 ஜனவரியில் பல வற்புறுத்தல், ஆலோசித்தலுக்கு பின், அன்றைய தமிழக அரசு ஒரு அரசாணையை நிறைவேற்றியது.அதை எதிர்த்து நடந்த வழக்கில், 2022 டிசம்பரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதற்கு தேவையான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.அதன்படியே, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதே தவிர, தி.மு.க.,வுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.தி.மு.க., கூட்டணி ஜல்லிக்கட்டை தடை செய்ததால்தான், பா.ஜ.,வால் தடையை விலக்க முடிந்தது என்று வேண்டுமானால், தி.மு.க., பெருமைப்பட்டு கொள்ளலாம்.காவிரி பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, ஜல்லிக்கட்டு தடை ஆகட்டும், எப்போதுமே தமிழ் பாரம்பரியத்தை விட, தமிழர்களின் நலனை விட, பதவி தான் தி.மு.க.,வுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளின் துவக்கமாக, தி.மு.க.,வாக தான் இருந்து வருகிறது.தன் குடும்பத்தின் அதிகார பசிக்கு, இன்னும் எத்தனை ஆண்டு காலம் பொய் சொல்லி, மக்களை ஏமாற்றும் இந்த கோபாலபுரம் குடும்பம்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Karthikeyan K Y
ஜன 25, 2024 17:46

கருணாநிதி மகன் என்றே ஒரே தகுதியில் திமுக தலைவர் பதவியை ஆட்டையை போட்டு முதல் முறை வாக்காளர்கள் அதிமுக எதிராக வேறு வழியில்லாமல் திமுகவிற்கு வோட்டை போடா அதில் ஜனநாயகத்திற்கு ஓட்டை விழுந்து இன்று ஜனநாயகம், சனா தானம், ஆளுநர் அதிகாரம், மக்கள் வோட்டு, மக்கள் எதிர்காலம், மாணவர் எதிர்காலம் விவசாயிகள், பத்திரிக்கை சுதந்திரம் , அறிஞர்கள், தமிழ்நாட்டின் பொருளாதாரம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், பள்ளி கல்வி, உயர்கல்வி, மருத்துவ கல்வி எல்லாமே கேள்வி குறியாகி ஊழலும், லஞ்சமும், பெருக்கெடுத்து ஓடி கொண்டு இருக்க, மறுபுறம், பேச்சுரிமை, மதவாதம், பெண்கள் பாதுகாப்பிண்மாய் , வரியும் கட்டணங்களும் கட்ட பஞ்சாயத்துகளும் அராஜககங்களும் இருக்க கோபாலபுரம் கோமான்கள் சொல்லும் பொய் இந்த பிரபஞ்சம் கண்டிராத பொய்களின் மூட்டை


Bala
ஜன 25, 2024 16:51

பழைய அண்ணா ஆரம்பித்த கட்சியை புதிய அண்ணா முடித்துவைப்பார்


r ravichandran
ஜன 25, 2024 12:56

கடந்த 55 ஆண்டுகளாக ஒன்றை மட்டும் தான் திராவிட மாடல் சரியாக செய்து வருகிறது. ஊழல். இதில் எம் ஜி ஆர் மட்டும் தான் தனிப்பட்ட முறையில் ஊழல் செய்யவில்லை.


pmsamy@protonmail.com
ஜன 25, 2024 12:50

பாஜக செய்த நன்மைகளை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் இப்படி புலம்புகிறான்


Sampath Kumar
ஜன 25, 2024 12:39

முந்தித்தால் நீயும் ஏமாற்றி பாரு உங்க கும்பலுக்கு தான் பொய்யை தவிர வேற தெரியாது இல்ல போவியா


திகழ்ஓவியன்
ஜன 25, 2024 13:08

அரசியலுக்கு வரவில்லை என்றால் அண்ணாமலை இந்நேரம் நிம்மதியாக இருந்திருப்பார்


hari
ஜன 25, 2024 13:57

அங்கே பிரியாணி போடுறாங்க.. நீ போலையா


RaajaRaja Cholan
ஜன 25, 2024 18:42

நீ போவியா , நீ எல்லாம் என்ன கல்வி தகுதி கொண்டவன் , நாகரீகம் அற்ற கோமாளி


duruvasar
ஜன 25, 2024 12:29

அண்ணாமலை கூறிய உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் ...எப்படி எழுப்புகிறது. திரவிடியன் ஸ்டாக் திரவிடியன் ஸ்டாக்குதான்


Sampath Kumar
ஜன 25, 2024 11:10

பொய்யை தவிர வேற எதுவும் தெய்ரியத்தை உங்க ஜி கிட்ட இருந்து தான் நாகா காத்துக்கிட்டோம் போவியா


Balasubramanian
ஜன 25, 2024 08:28

ஜல்லிக்கட்டு என்பது ஒரு ஆன்மீக பாரம்பரியம் - சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டம் ஆய்ச்சியர் குரவை பகுதியில் - மாடு வளர்க்கும் பெண்கள் கண்ணன் புகழ் பாடி ஆடி - தங்களை நப்பினையாக கருதி - தாங்கள் வளர்க்கும் பிடிக்க அவன் வருவான் என்றும் - அத்தகைய வீரனைத்தான் தாம் மணப்போம் - என்று கண்ணன் புகழ் பாடியிருப்பார் இளங்கோ அடிகள் - இது ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 10 சர்கம் 58 இல் வரும் கண்ணன் அவதாரத்தில் அவன் மாடு பிடித்து ஒரு பெண்ணை மணந்த காட்சியுமாகும். இத்தகைய ஆன்மீக வரலாற்றை - அதை மதுரையில் ஆயர் மகளிர் ஆடிப் பாடி கொண்டாடியதாக இளங்கோ அடிகளே பதிவு செய்திருப்பதை - இந்த திராவிட மாடல் அரசு மறைப்பது ஏன்?


Suppan
ஜன 25, 2024 16:12

இளங்கோ அடிகளா அது யார் என்றுதான் உபியானப்பட்டவர் கேட்பார். இருநூறு ரூபாயில் எவ்வளவு 0 என்று கேட்டால்தான் தெரியும்.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜன 25, 2024 08:19

கோபாலபுர குடும்பம் என்றதும் கருணாநிதியின் வீடுதான் ஞாபகத்துக்கு வருகிறது, எம்ஜிஆர் தனது ராமாவரம் தோட்டத்து பங்களாவை காது கேளாத வாய்பேச முடியாத ஏழைக் குழந்தைகள் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதி கொடுத்தார் அவர் மரணத்திற்கு பின் அவர் உயிலில் சொன்னது போல் அவரது சொத்துக்களினால் ஏழை குழந்தைகள் பலர் இன்றும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரைப் போலவே வசன கர்தாவன திருவாளர் கட்டுமர கருணாநிதியும் அப்போதைய அரசியல் விளம்பரத்திற்காக, தான் இறந்த பின் தன்னுடைய கோபாலபுரம் வீட்டையும் ஏழைகளுக்கு ஆஸ்பத்திரியா மாத்திடணும்னு உயில் எழுதி வச்சிருக்கேன் என்று இந்தியாவில் உள்ள எல்லா பத்திரிக்கையாளர்களையும் கூட்டி இதை அறிவித்தார் அதைக் கேட்டு அப்போதைய உபிஸ்கள் எல்லாம் சோகக் கண்ணீர் வடித்த காட்சிகள் அறங்கேறின. அதே போல் அந்த மஹா கர்ண பிரபு கருணாநிதி இறந்து இன்றோடு ஐந்து வருடம் முடிந்து ஆறாவது வருடம் தொடங்கி விட்டது ஆனால் அவர் ஊரைக் கூட்டி தம்பட்டம் அடித்தது போல அந்த கோபாலபுர வீட்டை இன்னும் தானமாக கொடுக்கவில்லை எப்போது ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுப்பார்கள் என்று இப்போது வரை அதைப் பற்றிய பேச்சையே காணோம். சரி கட்டுமர கருணாநிதி எழுதி வைத்த உயிலின்படி எப்பதான்யா கொடுக்கப் போகிறீங்க என்று மக்கள் கேட்டால்கலைஞர் நம்மை விட்டு பிரிந்தால்தானே அவர் இப்போதும் நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆகையால் இப்போதைக்கு கோபாலபுர வீட்டைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


Raghavan
ஜன 25, 2024 10:24

அவர் உயிலில் அவருடைய மனைவி இறந்தபின்தான் அந்த வீட்டை மருத்துவமனையாக மாற்றமுடியும் என்று எழுதி உள்ளார். எனவே அவருடைய மனைவி இறந்த பின்தான் செய்யமுடியும்.


ஆரூர் ரங்
ஜன 25, 2024 10:46

அந்த இடத்தில் கிளினிக்தான் நடத்த முடியும். ஆனா சுற்றி வசிக்கும் மில்லியனர் யாருக்கும் பலனில்லை.???????? அருகிலுள்ள வேணுகோபால சுவாமிக்குக் கொடுத்துவிடலாம். தயாளு அம்மாள் மனம் வைக்க வேண்டும்.


Subramanian N
ஜன 25, 2024 10:49

எந்த மனைவி? மனைவியா அல்லது துணைவியா?


திகழ்ஓவியன்
ஜன 25, 2024 13:09

உண்மையில் வாரிசு அரசியல் பற்றி அந்த கட்சி காரன் தான் கவலை படணும்


Bharatham
ஜன 25, 2024 14:00

கட்டுமரம் ஆவி இங்கே தான் இருக்கும்.


அலெஸ் குமார்
ஜன 25, 2024 08:02

நல்ல வேள, இன்னைக்கு யூடியுப் இருக்கபோயி தல அண்ணாமலை இவிங்கள எப்பிடி தோச்சு எடுக்குறாரு, என்ன மாடுலேஷன்ல பேசுறருன்னு மக்களை உடனே போய் சேருது. இல்லாட்டி இங்க ஒரு நியூசு அனா ஒரு நியூசுன்னு போயிருக்கும். அண்ணாமலைக்காக நம்பிக்கையுடன் கூடும் மக்களின் கூட்டம் வேற லெவல்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை