குடியரசு தின விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, 118 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், வடக்கு - 39, தெற்கு - 26, ஆனைமலை - 19 மற்றும் கிணத்துக்கடவு - 34 என, மொத்தம், 118 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது.டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் வாயிலாக, 2024 - 25ம் நிதியாண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஆண்கள் - 2,649, பெண்கள் - 3,327என, மொத்தம், 6,026பேர் பங்கேற்றனர். மொத்தம், 799 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தெற்கு ஒன்றியத்தில் நடந்த கூட்டத்தில், 2,136 ஆண்கள், 2,370 பெண்கள், மற்றவர் ஒருவர் என, மொத்தம், 4,507 பேர் பங்கேற்றனர். 425 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனைமலை ஒன்றியத்தில் நடந்த கூட்டத்தில், ஆண்கள், 1,626, பெண்கள், 1,882 என மொத்தம், 3,508 பேர் பங்கேற்றனர். 336 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், ஆண்கள், 2,437, பெண்கள், 2,748 மொத்தம், 5,185 பேர் பங்கேற்றனர். மொத்தம், 705 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நான்கு ஒன்றியங்களில் உள்ள, 118 ஊராட்சிகளில் மொத்தம், 19,226பேர் பங்கேற்றனர்; 2,265 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடுமலை
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில், நேற்று காலை, 11:00 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் செலவினப்பட்டியல் தயாரிப்பு, பொது சுகாதாரம், தனிநபர் இல்லக்கழிப்பிடம் கட்டுதல், ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுபடுத்துவது உட்பட, 1,005 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 3,198 ஆண்கள் மற்றும் 3,743 பெண்கள் மொத்தமாக, 6,941 பேர் பங்கேற்றனர். மறியல்
பி.டி.ஒ., சுப்ரமணியம் குறிஞ்சேரி ஊராட்சிக்கான கிராம சபைக்கூட்டத்தில் தலைமை வகித்தார். இதில், நகராட்சியுடன் குறிஞ்சேரியை இணைக்கக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, ஒரு தரப்பினர் திடீரென பிரதான ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தினர்- நிருபர் குழு -.