உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ., நிர்வாகிக்கு கத்திக்குத்து மளிகை கடைக்காரர் கைது

பா.ஜ., நிர்வாகிக்கு கத்திக்குத்து மளிகை கடைக்காரர் கைது

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அரசம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம், 36. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே ராஜ்குமார், 45, என்பவர் நின்று மொபைல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.கடை அருகே உள்ள பேக்கரியில், ராஜ்குமாரின் உறவினரான பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட நிர்வாகி ராமலிங்கம், 41, இருந்தார். இதை கண்ட ராமலிங்கம், மாரிசெல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ராமலிங்கத்தின் வயிற்று பகுதியில் மாரிசெல்வம் கத்தியால் குத்தினார்.இதில், படுகாயமடைந்த ராமலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வதை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை