உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

 கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

கோவில்பாளையம்: அத்திப்பாளையம் ஊராட்சியில், வரும் 5ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கடந்த 2024 ஏப்., 1 முதல், 2025 மார்ச் 31 வரை சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், அத்திப்பாளையம் ஊராட்சியில் நடந்த பணிகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. வட்டார வள அலுவலர் தலைமையில் தணிக்கையாளர்கள் பணிகளை அளவீடு செய்து வருகின்றனர். ஆவணங்களையும், தொழிலாளர்களின் வேலை அட்டைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. வரும் 5ம் தேதி ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி, பயன்பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை, கண்டறியப்பட்ட ஆட்சேபனைகள் வாசிக்கப்படுகிறது. 'அத்திப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம்' என, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராம மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி