உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கொட்டியது மழை... உயர்ந்தது கேரட் விலை

 கொட்டியது மழை... உயர்ந்தது கேரட் விலை

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு, நீலகிரியில் இருந்து கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு விளையும் கேரட், பீட்ரூட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்குகளை அறுவடை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் கேரட் வரத்து பெருமளவு குறைந்ததால் விலை உயர்ந்து விற்பனை ஆனது. மேட்டுப்பாளையம் வெஜிடபிள் சேம்பர் அப் காமர்ஸ் செயலாளர் ஹக்கீம் கூறியதாவது :- நீலகிரியில் இருந்து 90 வண்டிகள் கேரட் வருவது வழக்கம். மழையால் 60 வண்டிகள் மட்டுமே வந்தன. இதனால் நேற்று கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.47 வரை அதிகபட்சமாக விற்பனை ஆனது. நேற்று முன் தினம் ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. பீன்ஸ் ஒரு கிலோ நேற்று ரூ.20 முதல் ரூ.30 வரை, பீட்ரூட் ரூ.15 முதல் ரூ. 35 வரை, முட்டை கோஸ் ரூ.9 முதல் ரூ.13 வரை விற்பனை ஆனது. விலையில் பெரிய மாற்றம் இல்லை. நேற்று முன் தினம் உருளைக்கிழங்குகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில், மழை காரணமாக உருளைக்கிழங்குகள் அறுவடை செய்யவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில், அறுவடை செய்யவில்லை. இதனால் நாளை(இன்று) வரும் உருளைக்கிழங்குகள் வரத்து குறைந்து, விலை உயரும். இவ்வாறு, அவர் கூறினார். நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி உருளைக்கிழங்கு, அதிகபட்சமாக நேற்று முன் தினம் ரூ.1,100 முதல் ரூ. 1,600 வரை விற்பனை ஆனது. 1,550 மூட்டைகள் வரத்து வந்தது, என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை