உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குன்னங்காட்டுபதி பால் சங்கத்துக்கு  கேரளா மாநில அரசு விருது 

குன்னங்காட்டுபதி பால் சங்கத்துக்கு  கேரளா மாநில அரசு விருது 

பொள்ளாச்சி:பாலக்காடு மாவட்டத்தில் அதிக பால் அனுப்பிய குன்னங்காட்டு பதி சங்கத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளா பால்வளத்துறை அமைச்சர் ஜிஞ்சுராணி மற்றும் மில்மா சேர்மன் மணி ஆகியோர், விருதை, சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் ஜெயபிரகாஷ், சிவக்குமார் மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கினர்.சங்கத்தினர் கூறுகையில், 'கொழிஞ்சாம்பாறை அருகே குன்னங்காட்டுபதி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இருந்து தினமும், 20 ஆயிரத்து, 500 லிட்டர் பால் வழங்கப்படுகிறது.'மற்ற சங்கங்களை விட அதிகளவு இந்த சங்கத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. இதனால், ஊக்குவிக்கும் வகையில் கேரளா அரசு கடந்த, 2022 - 23ம் ஆண்டுக்கான விருதினை வழங்கியுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை