உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி வழிபாடு

மாகாளியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி வழிபாடு

ஆனைமலை : ஆனைமலை அருகே, மாகாளியம்மன் கோவிலில் குண்டம் தேர் திருவிழா நேற்று நடந்தது.ஆனைமலை அருகே, கோட்டூர் -- பழனியூரில் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார்.கடந்த, 6ம் தேதி மாவிளக்கு வழிபாடு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாணம், தேர்வடம் பிடித்தல், குண்டம் திறப்பு, பூ வளர்த்தல் நடந்தது.நேற்று, 61 அடி நீளம் உள்ள குண்டத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோட்டூர் எஸ்.ஐ., நாகராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. இன்று தேர் வடம் பிடித்தல், தேர்நிலை நிறுத்தம் செய்யப்படுகிறது. நாளை மாலை மஹா அபிேஷகம், சிறப்பு அலங்கார வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை