உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறன்பேசி செயலியில் கற்கும் முறை காணலாம்!

திறன்பேசி செயலியில் கற்கும் முறை காணலாம்!

கோவை:சி.எம்.சி., சர்வதேச பள்ளியின் வகுப்பறைகள் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில், திறமைமிக்க ஆசிரியர்கள் மூலம், சிறந்த கற்றல் முறை உருவாக்கப்பட்டுள்ளது. சி.எம்.சி., குழுமத்தின் தலைவரும், பள்ளியின் தாளாளருமான நாதன் கூறியதாவது:ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளோடு, இரண்டாம் மொழிப்பாடமாக தமிழும், வெளிநாட்டு கல்வி முறையும் கற்றுத்தரப்படுகிறது.கணினி, அறிவியல், கணிதம் போன்றவற்றிற்கு ஆய்வுக் கூடங்களும், மொழியாராய்ச்சி ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி கற்கும் முறையை நேரடியாக காண, 'திறன்பேசி செயலி' உள்ளது.நீட், ஐ.ஐ.டி., ஜே.இ. இ., போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. யோகா, நடனம், இசை, கராத்தே, கிரிக்கெட், புட்பால் பயிற்சிகளும் உண்டு.தொடர்ந்து நான்கு முறை, பத்தாம் வகுப்பிலும், இரண்டு முறை, பிளஸ் 2 தேர்விலும், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை