உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலை அறிவியல் கல்லுாரியில் வாழ்வியல் சொற்பொறிவு

கலை அறிவியல் கல்லுாரியில் வாழ்வியல் சொற்பொறிவு

பொள்ளாச்சி:பூசாரிபட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில் 'வள்ளுவம் காட்டும் வாழ்வியல்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, தமிழ்த்துறைத் தலைவர் அருள்ஜோதி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக, பாவலரேறு தேன் தமிழ் மன்ற அமைப்பாளர் திருமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''திருக்குறளில் கூறப்படாத அறங்களே கிடையாது; திருவள்ளுவரின் குறளைப் பின்பற்றினால் வாழ்வில் எல்லா விதமான உயர்வுகளையும் அடையலாம்,'' என்றார். உதவிப் பேராசிரியர்கள் மேனகா, சம்பத்குமார், இந்துரேகா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை